Description
ஒரு கப்பலில் இரண்டு கண்டெய்னர்கள், ஒவ்வொன்றிலும் 5000 கோடி பெறுமானமுள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளோடு, நள்ளிரவில் கொச்சியின் துறைமுகத்திற்கு வருகிறது. அந்த பணம் அனைத்தும் உடனடியாக சிறுபான்மை சமூகத்திலுள்ள குழுக்களுக்கு 100 சார்டட் அகௌண்டண்டுகள் கொண்ட நெட்வொர்க் வினியோகித்தது. இந்த ஒட்டு மொத்த பணமும் போலி நிறுவனங்களாகவும், வரி ஏய்ப்புக்காக ஏற்படுத்தப்பட்ட ஷெல் நிறுவனங்களாகவும், தொண்டு நிறுவனங்களாகவும் உருப்பெறுகிறது. இந்த செயல்பாட்டின் ஒரே நோக்கம் தேசத்தின் ஸ்திரத்தன்மையை ஆட்டம்காண வைப்பதே.
இந்தியாவை பலஹீனப்படுத்தவே இப்படிப்பட்ட கொடூரமான திட்டத்தைத் தீட்டியது ஃப்ரீடம் பார்ட்டி.
ஃப்ரீடம் பார்ட்டியின் பேராசைப் பிடித்த அரசியல்வாதிகள், நாட்டின் எதிர்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கவே முடியாதவாறு இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டனர். அதற்காக பெரிய அளவில் மைனாரிடிகளுக்குத் தீனிபோட்டு, அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மேலேயே அவர்களுக்கு அள்ளி வழங்கி எப்போதுமே தங்கள் கட்சியை அவர்கள் ஆதரிக்கும்படி பார்த்துக் கொண்டார்கள். அதனைச் செயல்படுத்த, பெரிய மதிப்புள்ள பணத்தை ப்ரிண்ட் செய்து, பண வரவை அதிகரிப்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கி, அதனைக்கொண்டு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது போன்ற தோற்றத்தை உண்டாக்க திட்டம் தீட்டினார்கள்.
எளிதில் எந்த ஊழலுக்கும் துணைபோகும் நிதிஅமைச்சரைக் கட்டாயப்படுத்தி, பாகிஸ்தான் கரன்ஸி நோட்டு அச்சடிக்க பேப்பர் வாங்குமிடத்திலேயே நம் நாட்டிற்கும் பேப்பரையும் வாங்க வைத்தார்கள். அதோடு, பாகிஸ்தானின் உளவுத்துறை நம்மவர்களை காதல் வலையில் ஆட்படுத்தி, நம் பணத்தில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு இழைகளைப் பெற்றுக் கொண்டனர். இதன் மூலம் அங்கு தயாரிக்கப்பட்ட நம் போலி பணம் நமது உண்மையான பணத்திற்கு ஈடாக இருந்தது.
இப்படியாக இந்தியாவின் உள்ளே நுழைந்த போலி கரன்ஸி, நாடுமுழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக புழக்கத்தில் கொண்டு வரப்பட்டது. நல்ல பணமும் போலி பணமும் ஒன்றுடன் ஒன்று கலந்து, கடுமையான பணவீக்கமும், ரியல் எஸ்டேட் விலையில் அதீதமான உயர்வும் ஏற்பட்டது. இவர்களின் தொடர் ஊழல்களால் பீப்பிள் வாய்ஸ் என்னும் ஒன்றைக்கட்சி தனிப்பட்ட முறையில் பெரும்பான்மை ஓட்டுகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. இந்த புதியகட்சி தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக எதிரி நாட்டின் எல்லையினுள்ளேயே சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தினார்கள்.
பாகிஸ்தான் இந்தியாவைப் பழிவாங்கும் விதமாக போலி கரன்ஸிகளின் தயாரிப்பை மூன்று மடங்காக உயர்த்தி நம் நாட்டிற்குள் வெள்ளமென அவைகளைப் பரவ விட்டனர். இதற்கு எதிர்வினையாக இந்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாத பணமாக அறிவித்து, வேறு அளவுகளில் அவைகளைப் பிரிண்ட் செய்தனர். இப்படிப்பட்ட நல்ல முயற்சி எடுத்தபோதிலும், பங்களாதேஷ் மற்றும் நேபாளத்து எல்லைகளிலுள்ள எல்லைப்புற அத்துமீறல்களால் இந்திய வங்கிகளை பெரிய அளவில் போலி கரன்ஸி நோட்டுகள் சென்றடைந்தது. பழைய பணத்தின் கணக்குகளைச் சரிபார்த்தபோது, ரிஸர்வ் வங்கிக்குத் திரும்பி வரவேண்டிய 87% பணத்திற்கு பதிலாக 113% பணம் வந்து சேர்ந்தது.
இவ்வாறு உள் நுழைந்த போலி கரன்ஸிகளின் மூலமாக பல்வேறு கொடூரமான செயல்பாடுகள் நடந்தேறியது. அதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரைக் கொலை செய்வதற்கான திட்டமும் அடக்கம். நமது புலனாய்வுத்துறை உண்மையான கொலைகாரனைக் கண்டுபிடித்து நம் பரதமருக்குத் தகுந்த பாதுகாப்பு அளிப்பார்களா..? படித்து அறிந்து கொள்ளவும்.
Reviews
There are no reviews yet.